மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு!
மத்திய இணை அமைச்சரும் தமிழக முன்னாள் பாஜக தலைவருமான எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சரும் தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவருமான எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில ராஜ்யசபா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான தவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது எம்.பி. பதவி காலியாக இருந்தது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கு யாரும் போட்டியிடவில்லை. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான தேதியும் நேற்றுடன் முடிவடிந்தது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான வெற்றிச் சான்றிதழை அவரிடம் தேர்தல் அதிகாரியான ஏ.பி.சிங் வழங்கினார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Source, Image Courtesy: Dinamalar