சாதிக்கு ஒரு சுடுகாடு'தான் திராவிட மாடலா? இதனை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? எல்.முருகன் சாட்டையடி

Update: 2022-05-09 11:56 GMT

உண்மையான சமூக நீதியின் ஹீரோவாக பிரதமர் மோடி திகழ்கிறார் எனவும், வெட்கமே இல்லாமல் எதனை திராவிட மாடல் என தி.மு.க.வினர் கூறுகிறார்களோ என்று தெரியவில்லை, என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளத்தில் பா.ஜ.க. சிறுபான்மை அணியின் மாநிலச் செயலாளர் சதீஷ் ராஜா இல்ல விழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சிலர் திராவிட மாடல் என்று பேசி வருகின்றனர். திராவிடர்கள் என்பது என்னவென்று அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். சுமார் 60 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது கூட தமிழகத்தில் தனித்தனி சாதியினருக்கு தனித்தனியாகச் சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பட்டியிலின மக்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

பல கிராமங்களில் பட்டியிலன மக்கள் உள்ளே நுழைய முடிவதில்லை. இதுதான் உங்களின் திராவிட மாடலா? சாதிக்கு ஒரு சுடுகாடு வைத்துக்கொள்வது திராவிட மாடலா? இதனை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா. உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடி ஒருவர் மட்டுமே. அவர் பிரதமராக வந்த பின்னர்தான் தாய்மார்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது. 2014க்கு முன்பு வரையில் விவசாயிகள் தற்கொலை இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பிரதமர் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News