'பா.ஜ.க கைகாட்டும் நபரே அடுத்த தமிழக முதல்வர்' - வெற்றிவேல் யாத்திரையில் எல்.முருகன் சபதம்

'பா.ஜ.க கைகாட்டும் நபரே அடுத்த தமிழக முதல்வர்' - வெற்றிவேல் யாத்திரையில் எல்.முருகன் சபதம்

Update: 2020-11-09 08:54 GMT

தமிழக அரசியலில் பா.ஜ.க முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தமிழக அரசியல் முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும் பா.ஜ.க இன்றி அது முழுமை பெறாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக பா.ஜ.க சார்பில் 'வெற்றிவேல் யாத்திரை' செல்ல முயற்சித்து அதனை காவல்துறை ஏதாவது காரணம் சொல்லி நிறுத்துவதும், அந்த வேல் யாத்திரைக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து திராவிட கட்சிகள் சற்று ஆடிப்போய் உள்ளன என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. 

இந்த நிலையில் நேற்று சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆலந்தூரை நோக்கி  வெற்றிவேல் யாத்திரை செல்ல முயன்ற பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட அக்கட்சியினர் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் திருத்தணியில் கைது செய்யப்பட்டு பிறகு மாலையில் எல்.முருகன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் திருவுடையம்மன் கோயில் வந்த அவர், நடை மூடப்பட்டு இருந்ததால் வெளியே இருந்து கற்பூரம் காட்டி வழிபட்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் அடுத்த முதல்வர் பா.ஜ.க கைகாட்டும் நபரே இருப்பார்" எனவும், "தி.மு.க இந்துக்கள் விரோத கட்சி" எனவும் விமர்சித்தார். இதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 300 பேரையும் போலீசார் கைது செய்து, அருகிலுள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

Similar News