பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: காங்கிரசை கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் தர்ணா!

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தபோது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியை ஏற்படுத்திய காங்கிரசை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-01-08 02:15 GMT

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தபோது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியை ஏற்படுத்திய காங்கிரசை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, பட்டினப்பாக்கத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர்கள் தலைமை வகித்தனர். மேலும், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உட்பட அனைவரும் காந்தி சிலையை நோக்கி ஊர்வலமாக புறப்பட தயாராகினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மேலும், போலீசாரை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதன் பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பாஜக தலைவர்களிடம் இணை கமிஷ்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News