'கருணாநிதி'தான் அவருக்கு இசைஞானி'ன்னு பேர் வச்சாரு தெரியுமா?' - இளையராஜாவின் எம்.பி பதவிக்கு தி.மு.க'வின் முரசொலி கதறல்

இளையராஜாவை விட்டு விடுங்கள் என தி.மு.க'வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி கதறியுள்ளது.

Update: 2022-07-09 07:54 GMT

இளையராஜாவை விட்டு விடுங்கள் என தி.மு.க'வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி கதறியுள்ளது.

நேற்று முன் தினம் இசைஞானி இளையராஜாவிற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி பா.ஜ.க அரசால் வழங்கப்பட்டது, இதனை பிரதமர் மோடி அறிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தி.மு.க இதனை அரசியலாக பார்த்துள்ளது, இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் வெளிவந்த சிறப்பு கட்டுரையில் இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி அவரை விவாத பொருளாக்கி அவர் இலக்கை மடை மாற்றி திசை திருப்பாதீர்கள் என குறிப்பிட்டுள்ளது.

அவர் சாதிகளை, மதங்களைக் கடந்தவர் என்பதால் தான் அவருக்கு இசைஞானி என்ற பட்டத்தை கருணாநிதி தந்து பாராட்டினார். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பசுந்தோல் போர்த்தி வந்தாலும் அதன் உண்மை சுயரூபத்தை எடுத்து காட்டுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் நிறைய சாதிக்க இளையராஜா வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். அரசியலில் விளையாட்டுகளை அரசியல்வாதிகளுடன் நடத்துங்கள் படைப்பாளிகளை விட்டு விடுங்கள் இளையராஜா வாரணாசிரமதர்மப்படி தலையில் பிறக்காவிடினும் இசை உலகம் அவரை தலையில் தாங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.


இசைஞானி இளையராஜாவிற்கு எம்.பி பதவி பா.ஜ.க அளித்தது தி.மு.க'விற்கு எந்த அளவிற்கு கோவம் ஏற்படுத்தி உள்ளது என்று இந்த முரசொலி செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. 


Source - News 7 Tamil

Similar News