"முடிஞ்சா ஸ்டாலின் மதுரையில் போட்டியிடட்டும்" - ஸ்டாலினுக்கு சவால் விடுக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

"முடிஞ்சா ஸ்டாலின் மதுரையில் போட்டியிடட்டும்" - ஸ்டாலினுக்கு சவால் விடுக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

Update: 2021-01-26 11:54 GMT

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சூடுபிடிக்க துவங்கிவிட்டன, இதன் காரணமாக அரசியல் கட்சியின் தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் "தி.மு.க தலைவர் ஸ்டாலின் மதுரையில் போட்டியிட முடியுமா?" என சவால் விடுத்துள்ளார் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜூ

 மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய அவர் கூறியதாவது, "திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் முடிந்தால் மதுரையில் போட்டியிடட்டும்” என சவால் விடுத்துள்ளார்.

ஏற்கடவே சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ்'க்கு விட்டுகொடுத்தது தவறு என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய பதில்தான் இது.

Similar News