"வழக்கு போட்டு கொள்ளட்டும், முடிந்தால் கைது செய்யட்டும்" - உதார் விடும் உதயநிதி!

"வழக்கு போட்டு கொள்ளட்டும், முடிந்தால் கைது செய்யட்டும்" - உதார் விடும் உதயநிதி!

Update: 2021-01-14 07:00 GMT

சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசியதற்கு உதயநிதி மீது 4 பிரிவுகளில் நேற்று வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பேசிய உதயநிதி, "தன் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்க" என்று தெனாவட்டாக பேசியுள்ளார்.

உதயநிதி முதல்வர் எடப்பாடி மற்றும் சசிகலாவை பற்றி அவதூறாக பேசினார். "அவர் முதல்வர் எடப்பாடி அல்ல டெட்பாடி, அவர் காலில் விழுந்து'தான் முதல்வரானார்" என்கிற ரீதியில் ஆபாசமாக பேசினார். இதற்கு அனைத்து பெண்கள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. உதயநிதி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்ற கருத்துக்களை பலரும் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் பேசிய உதயநிதி, "நான் கலைஞரின்  பேரன்,  மன்னிப்பு கேட்கமாட்டேன்" என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி பேரன் என்றால் கட்சி பதவிக்கு வருவது இருக்கட்டும் அதற்காக இப்படியா ஆபாசமாக பேசுவது என்கிற விமர்சனங்களும் எழுந்தன.

இதனையடுத்து நேற்று அ.தி.மு.க'வை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலெட்சுமி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி மீது 4 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இன்று பேசிய உதயநிதி தன்னுடைய பேச்சிற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் “வேண்டும் என்றால் என் மீது வழக்கு போட்டு கொள்ளட்டும்” என்றும் உதயநிதி தெனாவட்டாக தெரிவித்துள்ளார்.

Similar News