அரசு, தனியார் கட்டடங்களில் விளம்பரம் செய்ய தடை! தேர்தல் ஆணையம் உத்தரவு !
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதில் சில அரசியல் கட்சிகள் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இது சில இடங்களில் அனுமதி பெற்றும் பெறாமலும் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் பதாகைகள் வைக்க மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி அரசு தொடர்பான இடங்கள், அரசு கட்டட வளாகங்களில் சுவரொட்டி ஒட்டுதல், சுவரில் எழுதுதல், பதாகைகள் வைத்தல் உள்ளிட்டவைகளுக்கு அனுமதிக்கபடாது என கூறப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும் அங்கு சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai