உள்ளாட்சி தேர்தலில் வி.சி.க'விற்கு இடங்களை கிள்ளிப்போட்ட தி.மு.க - இதுதான் சமூகநீதியா?
Breaking News.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை தி.மு.க கிள்ளிப்போட்டு பெரும்பாலன இடங்களை அள்ளியிருக்கிறது.
கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைபெறாமல் விலக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சிகள் பரபரவென இயங்க ஆரமித்துள்ளன. தி.மு.க தரப்பில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டு குறைந்த இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் 3 இடங்கள், விசிக 1 இடம், சிபிஐ, சிபிஎம் தலா 1 இடம் என மொத்தம் 6 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு சிறிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் மீதமுள்ள 132 இடங்களில் தி.மு.க போட்டியிடுகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 13 தொகுகளில் தி.மு.க போட்டியிடுகிறது. வி.சி.க'விற்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இட ஒதுக்கீடே கிடையாது.
இவ்வாறாக சமூக நீதி'க்கு நாங்கள்தான் காவலர் என விளம்பரப்படுத்தும் தி.மு.க வகையறா கூட்டணி கூடவே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒற்றை இலக்க ஒதுக்கீடே செய்துள்ளது.