கேரளாவின் கொரோனோ செயல்பாடுகள் சூப்பர் ! - கொரோனோ குறையாத கேரளத்தை புகழ்ந்த மா.சுப்பிரமணியன் !
கேரளாவில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கும் தினசரி கொரோனா குறைந்து வருகிறது" என்றார் அவர்.
"கேரளாவில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கும் தினசரி கொரோனா குறைந்து வருகிறது" என கேரளாவை பாராட்டியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கேரளத்தில் கொரோனோ தொற்று எண்ணிக்கை குறையாத நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் ஆளும் பினராயி விஜயன் அரசு தடுமாறி நிற்கும் நிலையில் கேரளாவில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என கேரளாவே எதிர்பார்க்காத அளவிற்கு புகழந்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "கோவை கேரள எல்லை பகுதியில் இருப்பதால் கொரோனா அங்கு அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கேரளாவில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கும் தினசரி கொரோனா குறைந்து வருகிறது" என்றார் அவர்.
மேலும், "செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு தான் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சொல்வது தவறான கருத்து. அவர்களுக்கு ஏற்கனவே அறிகுறிகள் என்பதால் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" எனவும் விளக்கம் அளித்தார்.