கூடுதல் 19 லட்சம் தடுப்பூசி தந்துள்ளது மத்திய அரசு - பெருமைபட்டுக்கொள்ளும் மா.சுப்பிரமணியன் !

"எல்லா பகுதிகளுக்கும், தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2021-08-09 07:45 GMT

"இந்தியாவிலேயே, தமிழகத்திற்கு கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது,'' என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஓசூர் அடுத்த சாமனப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி கூறியதாவது, "மத்திய அரசு சார்பில் வழங் கப்படும், 75 சதவீத தடுப்பூசிகள் எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து தரப்படுகிறது.

மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு கூடுதலாக, 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள் ளது. இந்த மாதத்திற்கு, 79 லட்சம் தடுப்பூசிகள தருவதாக கூறியுள்ளனர்.

இதுவரை மொத்தம், 2 கோடியே 39 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 2 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எல்லா பகுதிகளுக்கும், தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.

https://m.dinamalar.com/detail.php?id=2817119

Tags:    

Similar News