தொடர்ச்சியான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் - ஆர்.எஸ்.எஸ் முன்னாள் மாவட்ட தலைவர் கூறியதென்ன?

வாகனம் நிறுத்தும் இடத்திற்கு பதிலாக பெட்ரோல் குண்டு என் வீட்டு மீது வீசி இருந்தால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று RSS முன்னாள் மாவட்ட தலைவர் பேட்டி.

Update: 2022-09-26 02:41 GMT

மதுரையில் RSS முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் வீட்டில் நேற்று இரவு வாகனம் நிறுத்தும் இடத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் வீட்டில் பஜனை நடந்து கொண்டிருந்தது. தொடர்ந்து உறவினர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.


காரில் வீசிய பெட்ரோல் குண்டை என் வீட்டு மீது வீசி இருந்தால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். பா.ஜ.க மாவட்ட தலைவர் சுசீந்திரன் கூறுகையில், NIA சோதனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்துகிறது.


இது தொடர்பாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று கீரைத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். கோவையைத் தொடர்ந்து சென்னை மதுரை பொள்ளாச்சி போன்ற பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் அவர்களுடைய அலுவலகங்கள், கார் மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News