மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலர் வெளிமாநிலங்களில் முகாமிட்டிருப்பதால், ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சி பறிபோய்விடுமா என்ற நிலையில் மாநில அமைச்சரவையை கூட்டி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. சட்டமேலவையில் காலியாக இருக்கும் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். இதில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலா 2 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அதே சமயம் பா.ஜ.க.வும் 5 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
அதாவது ஒரு எம்.எல்.சி. வெற்றி பெறுவதற்கு 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை உள்ள நிலையில், பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் போட்டியிட்ட 5 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் கொறடா உத்தரவை மீறி ஆளுங்கட்சி வேட்பாளர்களே பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிவசேனா கட்சியை சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அக்கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்கள் சூரத்தில் இருக்கின்ற நட்சத்திர விடுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் தற்போது சிவசேனா கூட்டணி கட்சியின் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆட்சியை தக்க வைக்க சிவசேனா கட்சியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு வேளை சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால் சிவசேனா தலைமையிலனா கூட்டணி ஆட்சி கவிழவும் வாய்ப்புள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu