கோடிக்கணக்கில் பணமோசடி: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் தேஷ்முக் கைது!

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நள்ளிரவில் அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Update: 2021-11-02 03:40 GMT

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நள்ளிரவில் அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று (நவம்பர் 1) ஆஜரானார். இவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். 


அப்போது மும்பையில உள்ள மதுபான விடுதி, மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடம் மாதம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தர அழுத்தம் கொடுத்துள்ளார். மும்பை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மும்பை மற்றும் நாக்பூரில் அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் அவருக்கு சொந்தமான 4.20 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே உதவியுடன் மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து 4.70 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது.

இதனையடுத்து அனில் தேஷ்முக் மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் படி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது தேஷ்முக்கின் உதவியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தேஷ்முக்கை ஆஜராகும்படி அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார். ஜாமீன்கோரி மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடியும் செய்தது. இதனால் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தேஷ்முக்கை கைது செய்தது. மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பணமோசடியில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy: Free Press Journal


Tags:    

Similar News