திடீரென திரௌபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பதற்றத்தில் எதிர்க்கட்சிகள்!
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சாதகமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளர்களை நேற்று (ஜூலை 2) சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக எங்களிடம் பா.ஜ.க. ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அது போன்று ஆலோசனை நடத்தியிருந்தால் பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முவை நாங்கள் ஆதரித்திருப்போம் என்றார். மேலும், பழங்குடியினத்தை சேர்ந்த அவருக்கு கட்டாயம் நாங்கள் ஆதரவு கொடுப்போம். பழங்குடியினத்தவருக்கு எப்போதும் ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி தற்போது பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து பேசியிருப்பது, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை மம்தா பானர்ஜி ஆதரிக்க மாட்டார் என்ற பயமும் அவர்களுக்கு எழுந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தை கண்டு எதிர்க்கட்சிகள் தற்போது வரையில் பதற்றத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai