மேகதாது அணை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது !
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

மேகேதாட்டு அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நேற்று தில்லியில் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை,''காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்தக் கூட்டத்தின் விவாதத்திற்கான பொருட்களில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சேர்ப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்'' என்று கூறினார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்றும் சூழலில், இத்தகைய வாக்குறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்திருப்பது தவறு; அதை ஏற்கமுடியாது.
மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததில் இருந்தே, இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து விவாதிப்பதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. 03.12.2018 அன்று நடைபெற்றக் கூட்டத்தில் இது குறித்து பிரச்சினை எழுப்ப கர்நாடக அரசின் பிரதிநிதிகள் முயன்ற நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மேகேதாட்டு குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. அதன்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேகேதாட்டு அணை குறித்து கர்நாடகம் விவாதிக்க முயல்வதும், தமிழகத்தின் எதிர்ப்பால் அது கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக்கூடாது.