எம்.ஜி.ஆர். மீது கமலுக்கு பக்தி இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார்.!

எம்.ஜி.ஆர். மீது கமலுக்கு பக்தி இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார்.!

Update: 2020-12-16 16:32 GMT

எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது என்று கமலுக்கு பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்து பேசியதாவது: கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார். தற்போது ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்கமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்.

இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு யாருக்கும் போடாது. எம்.ஜி.ஆர்., பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை பிரிக்க முடியாது. எம்.ஜி.ஆர்., 10 கோடி தமிழர்களுக்கும் சொந்தம்.

மேலும், எம்.ஜி.ஆரின் படத்தை போஸ்டரில் சிறியதாக்கியவர்கள் என்னை எதிர்கிறார்கள் என்ற கமல் கருத்துக்கு எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது அதிமுக. கமல் எத்தனை அணி அமைத்தாலும் அது பிணியாகத்தான் போகும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
 

Similar News