எல்லாரும் ஒத்துழைப்பு கொடுங்கள் - பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ்

'பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்' என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

Update: 2022-06-24 12:16 GMT

'பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்' என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பள்ளி கல்வி துறை அலுவலர்களுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது, இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், 'பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் கூட்டாக செயல்பட்டால்தான் இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும், அமைச்சராக ஆண்டுகளை கடத்த வேண்டும் என்பது ஆசை இல்லை இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதற்கு பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இரு கண்களாக நினைத்து தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அதிகாரிகளின் துறையின் முக்கியத்துவம் கருதி செயல்பட வேண்டும்.

தற்போதைய டிஜிட்டல் உலகில் மாணவர்களை கையாள்வது சிரமமான ஒன்றுதான் ஒவ்வொரு மாணவரையும் ஒரு மாதிரியாக கையாள்வதை விட மாணவர்களின் மன நிலைக்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும்' என்றார்.


Source - Junior Vikatan

Similar News