ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் 2 கோடிக்கு சொகுசு காரை இறக்கிய அமைச்சர் கே.என்.நேரு - முதல்வர் ஸ்டாலினிடம் இல்லாத கார் அது

இரண்டு கோடி மதிப்பிலான வெளிநாட்டு சொகுசு காரை தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு இறக்குமதி செய்தது பரபரப்பாகி வருகிறது.

Update: 2022-07-23 09:06 GMT

இரண்டு கோடி மதிப்பிலான வெளிநாட்டு சொகுசு காரை தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு இறக்குமதி செய்தது பரபரப்பாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 'டொயோட்டோ லேண்ட் க்ரூஸர் எல் சி 300' என்ற சொகுசு காரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக இறக்குமதி செய்துள்ளார்.

தமிழக அரசின் அமைச்சர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இன்னோவா கிரிஸ்டா காரை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம் கூட இல்லாத 'டொயோட்டோ லேண்ட் க்ரூஸர் எல் சி 300' என்ற புத்தம் புதிய 2022 ஆம் ஆண்டு மாடல் எஸ்.யூ.வி ரக காரை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி உள்ளார், இதன் மதிப்பு 2 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது புதிய வரவாக லாங் குரூஸர் எல் சி 3 ஸ்போர்ட்ஸ் மாடல் காரை இறக்குமதி செய்துள்ளார். இந்த ரக காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்வதற்காக அறிவித்ததும் பல நாடுகளில் நிறைய பேர் புக் செய்துள்ளனர் நான்காண்டுகளாக காத்திருந்து பலருக்கு கிடைக்காத இந்த கார் கே.என்.நேருவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பல இடங்களில் மக்கள் விலைவாசியால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகமாகி வருகிறது போன்ற பல குற்றச்சாட்டுகள் தி.மு.க அரசின் மீது இருக்கும் நிலையில் இரண்டு கோடி ரூபாய்க்கு கே.என்.நேரு சொகுசு கார் வாங்கி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source - Dinamalar

Similar News