முறைகேடாக தி.மு.க. வேட்பாளர் வெற்றி ! - அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறைத்து முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்!

செங்கல்பட்டு மாவட்டம், அகரம் தென் ஊராட்சியில் திமுக வேட்பாளர் முறைகேடு செய்து வெற்றி என அறிவிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-15 01:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அகரம் தென் ஊராட்சியில் திமுக வேட்பாளர் முறைகேடு செய்து வெற்றி என அறிவிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், புனிதம் தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், அகரம் தென் ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஆதிகேசவன் 390 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனிடையே திமுக வேட்பாளர் ஜெகதீசன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் முறைகேடு செய்து வெற்றி பெற்றிருப்பதாக சுயேட்சை வேட்பாளர் ஆதிகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் முறைகேடாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது தேர்தல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதே போன்று மற்றொரு ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றியையும் திமுகவினர் பறித்துவிட்டதாக குற்றம்சாட்டி, கே.என்.நேரு வந்த காரை அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறைகேடாக வெற்றி பெற்றதை திரும்பபெற வேண்டும் என அதிமுகவினர் அமைச்சரிடம் குற்றம்சாட்டினர்.

Source, Image Courtesy: News J

Tags:    

Similar News