மனு அளித்த 2 நாட்களில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.பி.அன்பழகன்.!

மனு அளித்த 2 நாட்களில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.பி.அன்பழகன்.!

Update: 2020-11-17 06:47 GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி சென்றபோது மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார். அவர் தனக்கு அரசு துறையில் ஏதாவது பணி வழங்கினால் தங்களின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவை பெற்ற இரண்டு மணி நேரத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி செய்வதற்கான ஆணையை வழங்கினார். இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சி மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கணம்பள்ளியில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் என 3 பேர் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் மனு அளித்தனர். 

மனு அளித்த இரண்டே நாட்களில் மாற்று திறனாளி உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகையை உரியவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உதவித்தொகையை பெற்றவர்கள் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
 

Similar News