பிரதமர் மோடி பற்றி தவறான பதிவு: பா.ஜ.க பதிலடியால் ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டு ஓட்டம் பிடித்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
பிரதமர் மோடி நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த புதிய பாராளுமன்றத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு செங்கோல் கொண்டு சென்று பிரதமர் மோடியிடம் ஆதினங்கள் வழங்கினர்.
பிரதமர் மோடி நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த புதிய பாராளுமன்றத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு சென்று பிரதமர் மோடியிடம் ஆதினங்கள் வழங்கினர். அதனை பெறுவதற்கு முன்னர் பிரதமர் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கிவிட்டு பின்னர் செங்கோலை கையில் ஏந்திச்சென்றார்.
பாரத பிரதமர் சாஷ்டாங்கமாக வணங்குவது தமிழ்நாட்டின் சோழர் மரபு செங்கோல் முன்பும் , தமிழ் ஆதீனத்தின் முன்பும் ! தமிழர் மரபும், தொண்மையும், பெருமையும், பண்பாடும், கலாச்சாரமும் அங்கே உயர்ந்து நிற்கிறது!
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 29, 2023
அமைச்சராக இருக்கும் ஒருவரின் இத்தகைய கீழ்த்தரமான கருத்து மிகவும்… pic.twitter.com/DEFd5FOV5F
இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் மூச்சு இருக்கா.. மானம்.. ரோசம் என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் அமைச்சருக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
The Bedrock of Dravidian politics is Slander & Abuse.
— K.Annamalai (@annamalai_k) May 29, 2023
As crooked as your thought, as wicked as your party & your forsaken ideology, your hatred for this land’s culture has no end, @Manothangaraj.
The layers of onion have begun to peel faster than expected! https://t.co/ULUiptZOTe
மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த பலர் ட்விட்டரில் அமைச்சரின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பதிவை நீக்கம் செய்தார். பா.ஜ.க.வினர் கடுமையான பதிலடியை ட்விட்டரில் பதிவு செய்வார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.