சீனி சக்கர சித்தப்பா.. ஏட்டில் எழுதி நக்கப்பா.. தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து.!

திமுகவின் தேர்தல் அறிக்கை சீனி சக்கர சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்பதை போல உள்ளது என கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Update: 2021-03-16 03:47 GMT

திமுகவின் தேர்தல் அறிக்கை சீனி சக்கர சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்பதை போல உள்ளது என கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சரும், ராஜபாளையம் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.




 


இதில் பங்கேற்று அவர் பேசும்போது: ராஜபாளையம் தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கழக வீரர்கள் தோழமைக் கட்சி நண்பர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், கழகத்தைக் கட்டிக் காத்து நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கழகத் தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை தேர்தல் அறிக்கையாக நம்முடைய கழகம் வெளியிட்டுள்ளது.


 



ஆனால் திமுக தேர்தல் அறிக்கையை பார்த்தோம் என்று சொன்னாள் திமுகவின் தேர்தல் அறிக்கை சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்பதைப்போன்று வெத்து அறிக்கையாக உள்ளது. எனவே திமுகவால் அறிவித்துள்ள நலத்திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியாது, ஆனால் நம்முடைய கலகம் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை நிச்சயமாக பொதுமக்களுக்காக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News