கொரோனா குறைந்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு வந்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி யோசிக்கலாம். தற்போது ஆக்சிஜன் மட்டும் சேமிக்கலாம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Update: 2021-07-08 10:31 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம் என்றும், தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி யோசிக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணி கூறியதாவது: புதிதாக பதவியேற்ற சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக அனைத்து நீர் நிலைகளிலும் ட்ரோன் மூலமாக கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும், தற்போதைய சூழலில் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரு நாளைக்கு உற்பத்தியாகிறது. எனவே 3வது அலை பரவினாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.இருந்தபோதிலும் கொரோனா 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆக்சிஜன் சேமிப்பது மிகவும் அவசியம்.

தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு வந்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி யோசிக்கலாம். தற்போது ஆக்சிஜன் மட்டும் சேமிக்கலாம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News