உதயநிதியின் பேச்சில் தெரிந்த பயம் - ஈரோடு தேர்தல் காரணமா?
தி.மு.க அளித்த 75% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், ஆனால் அதை மக்களிடம் போய் சேர்க்காதது தான் பிரச்சனை என கூறிய அமைச்சர் உதயநிதி.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 712 பயனாளிகள் அவர்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பாண்டி கோயில் அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. அண்ணன் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி மற்றும் பல்வேறு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் என அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, இதுவரை நாங்கள் அழைத்த தேர்தல் வாக்குறுதிகளில் 75% நிறைவேற்று இருக்கிறோம் என்று இப்போது பொது வெளியில் கூறியிருக்கிறார்.
ஆனால் இதை மக்களுக்கு நாங்கள் கொண்டு போய் சேர்க்காததுதான் பிரச்சனை. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து போட்டார். இதுவரை தமிழக முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் 220 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. ஏழை மக்கள் கல்வி தொடர புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று பல்வேறு திட்ட உதவிகளை கூறினார்.
75% வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்று விட்டதா? என்று பார்த்தால், கிடையாது என்பது தான் பெரும்பாலான மக்களின் பதிலாக இருக்கும். குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக ஓட்டுக்களை பெற்றுவதற்கு முக்கிய வாக்குறுதியான மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 என்ற வாக்குறுதி புதுச்சேரியில் நிறைவேற்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் அதை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Vikatan