'அமைச்சர்கள் சண்டை போட்டுக்கொள்வது முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுமை திறன் இல்லாத காரணத்தினால்' - போட்டு உடைத்த டி.டி.வி தினகரன்

'முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைத்திறன் கேள்விக்குறியாக உள்ளது' என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.

Update: 2022-11-24 06:02 GMT

'முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைத்திறன் கேள்விக்குறியாக உள்ளது' என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நட்சத்திரரீதியாக தனது 59ஆவது வயது நிறைவடைந்து அறுபதாவது வயது துவங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி திருக்கடையூர் தாலுகாவில் உள்ள அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சத்யப்தபூர்த்தி விழாவை முன்னெடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தது தினகரன் கூறியதாவது, 'அ.தி.மு.க கட்சி செயல்படாத நிலையில் உள்ளது' என அ.தி.மு.க'வை விமர்சித்தார்.

மேலும் தி.மு.க பற்றி பேசிய அவர், 'தி.மு.க ஒன்னரை ஆண்டு கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதனை சரி செய்து கொள்ளவில்லை என்றால் இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள். வருகின்ற தேர்தலில் தி.மு.க'வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும். மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் போராடும் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க ஆட்சியின் பலன்கள்' என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை திறன் கேள்விக்குறியாக உள்ளதால் அமைச்சர்களிடையே சண்டை ஏற்படுகிறது, எதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம்' எனக் கூறினார்.


Source - Junior Vikatan

Similar News