குடும்ப அரசியலுக்கு பிரதமர் மோடி 2024'ல் முற்றுப்புள்ளி வைப்பார் - அண்ணாமலை காட்டமான பேச்சு!

Update: 2022-05-13 13:12 GMT

திருவாரூர் தெற்கு வீதியை கருணாநிதி சாலை என்று பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை கண்டிக்கின்ற வகையில் நேற்று (மே 12) திருவாரூரில் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. முன்னாள் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர் பேசியதாவது: திருவாரூர் தியாகராஜர் தேரோடும் வீதியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட நினைப்பது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. மேலும், இலங்கையில் ஏற்பட்டிருப்பது போன்று இந்தியாவில் ஏற்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். எனவே இந்த நிலை தமிழகத்திற்கு வரும். ஏன் என்றால் ஒரு குடும்பத்தின் ஆட்சி செய்தால் இலங்கை நிலைமை கட்டாயம் ஏற்படும்.

அதாவது ராஜபக்சேவின் குடும்பத்தில் அதிபர், பிரதமர், முதலமைச்சர், எம்.பி. என்ற பல பதவிகளையும் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் அனைத்து பணமும் கொள்ளையடிக்கப்பட்டு ஒரே குடும்பத்திடம் குவிந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்தது. எனவே திருமாவளவன் தமிழகத்தை உற்றுநோக்கினால் தெரியவம். தமிழகத்தில் அறிவாலயம் குடும்பத்தின் வரைபடத்தை வரைந்து அதனை கவனித்தால் யார், யார் எந்த பதவியில் இருக்கின்றார்கள் என தெரியவரும்.

மேலும், பிரதமர் மோடி வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் இதுபோன்ற நிலைக்கும் எல்லாம் நாடு சென்று விடாமல், அறிவாலயம் குடும்பம், சரத்பவார், தாக்கரே உள்ளிட்ட குடும்பத்தின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி உலகமே வியக்கின்ற வகையில் தலைவராக உருவெடுப்பார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Tags:    

Similar News