சென்னையில் 3வது நாளாக நிவாரண உதவிகளை வழங்கி வரும் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியது. அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதியுற்று வருகின்றனர். அது போன்றவர்களுக்கு அதிமுக, பாஜக சார்பில் பல்வேறு வகையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

Update: 2021-11-12 10:40 GMT

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியது. அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதியுற்று வருகின்றனர். அது போன்றவர்களுக்கு அதிமுக, பாஜக சார்பில் பல்வேறு வகையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.


அந்த வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி வருகிறார். அதன்படி இன்று 3வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறார்.


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்து வந்ததால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் உணவு, குழந்தைகளுக்கு பால் இன்றி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். அது போன்றவர்களுக்கு திமுக அரசு எந்த ஒரு உதவிகளையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்துள்ளது.


இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து பள்ளிக்கரணை மற்றும் நாராயணபுரம் ஏரியையும் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் முன்னாள் அமைச்சர்களான வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News