இந்து மத நம்பிக்கை இல்லாத தி.மு.க'வினர் கோயில் விழாக்களில் தலைமையேற்கக்கூடாது - பா.ஜ.க. எம்.எல்.ஏ காந்தி!

Update: 2022-06-17 07:49 GMT

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயில் விழாக்களில் தலைமையேற்க அனுமதிக்க கூடாது என்று நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு ஆலம்பாடி ஸ்ரீகிருஷ்ண வித்யாலய பள்ளியில் ஆய்வகம் ஒன்று திறப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்கின்ற வகையில் மரம் நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை துவக்கி வைப்பதற்காக நாகர்கோயில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி வந்திருந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்து ஆலயங்கள், இந்து கடவுள்களை வணங்காமல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்துக்கொண்டு தி.மு.க. அரசு அறநிலையத்துறையின் வாயிலாக கோயில் நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தி.மு.க. அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எம்.ஆர்.காந்தி கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கோயில் நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க வேண்டும் என்றால் இந்து மத நம்பிக்கை இருப்பவர்களை அனுப்பி வைத்தால் பா.ஜ.க. மனதார வரவேற்கும். அதற்காக அறநிலையத்துறை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News