அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த யோகி ஆதித்யநாத்! இனி அதிரடி தான்!

Update: 2022-01-19 06:40 GMT

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். வடமாநிலமான உத்தர பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரஉள்ளது. இதனால் அங்கு அரசியல் மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங்கின் இளைய மகன், பிரதீக் யாதவ், இவரது மனைவி அர்பணா யாதவர். இவர் இன்று (ஜனவரி 19) டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்திரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பாஜக மாநில தலைவர் சுவந்திர தேவ் சிங் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.


இதனையடுத்து அபர்ணா யாதவ் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: பாஜகவுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கட்சியின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். மேலும், பிரதமர் மோடியின் பணிகள் என்னை ஈர்த்தது. தேசம்தான் முதல் பணி என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News