மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குறித்து ஆபாச பதிவு.. உபியில் கைதான முஸ்லீம் பேராசிரியர்.!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குறித்து முகநூலில் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்ட உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத்தை சேர்ந்த பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-07-22 02:13 GMT

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குறித்து முகநூலில் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்ட உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத்தை சேர்ந்த பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி. இவரரை பற்றி பிரோசாபாத் நகரில் உள்ள எஸ்.ஆர்.கே. கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியராக இருப்பவர் ஷாஹர்யார் அலி. இவர் கடந்த மார்ச் மாதம் ஆபாசமாக மத்திய அமைச்சர் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பேராசிரியர் மீது பிரோசாபாத் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது. அப்போது தனது முகநூல் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேக் செய்யப்பட்டதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.


இதனையடுத்து தொடக்கத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கு அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரோசாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஒரு பேராசிரியராக இருப்பவர் பெண்களுக்கு எதிராக ஆபாசமான முறையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது கண்டனத்துக்குரியது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News