நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கண்டித்து எம்.பி தர்ணா போராட்டம்!

Update: 2022-07-11 13:17 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்று நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ் திடீரென்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்டு நாமக்கல் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆவார். இவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வு சென்றிருந்த எம்.பி.,யின் பார்வைக்கு அங்குள்ள ஆவணங்களை இவருக்கு காண்பிக்கவில்லை. இதனால் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தார். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், மக்களவை உறுப்பினர் தலைமையில் கூட்டப்பட வேண்டிய மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம், மின்வாரிய குழு கூட்டம், சாலை பாதுகாப்பு குழு கூட்டம் உள்ளிட்டவைகள் நடைபெறவில்லை. இதற்கு ஆட்சியர் சார்பில் முழுமையான பதில் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், இதனை கண்டிக்கின்ற வகையில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த எம்.பி., சின்ராஜ், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் சமாதானம் பேசியும் தர்னா போராட்டத்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News