தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை நியமிக்க அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது.
அ.தி.மு.க., வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் தினந்தோறும் பிரச்சனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒற்றைத்தலைமை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று (ஜூலை 11) சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் அ.தி.மு.க., பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் எதிர்கட்சி துணைத்லைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு அ.தி.மு.க.வில் பலரும் போட்டி போட்டு வரும் நிலையில், ஓ.பி.எஸ்., சமுதாயத்தை சேர்ந்த நத்தம் விசுவநாதனை நியமனம் செய்யப்படுவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அ.தி.மு.க.வில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
Source, Image Courtesy: News 7 Tamil