நீட் தேர்வு தற்கொலைக்கு தி.மு.க தான் காரணம் - அண்ணாமலை
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு தி.மு.க செய்யும் அரசியல் தான் காரணம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை நீக்க முடியாது, நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகளுக்கு தி.மு.க செய்யும் அரசியல்தான் காரணம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் தீ நகரில் உள்ள கட்சி தலைமை இடத்தில் செய்தியாளர்களிடம் உரையாடிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் நீட் தேர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் பதில் அளிக்கையில் 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகம் மாணவர்களுக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக சாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பயிற்சி வகுப்பு அளிக்காமல், தி.மு.க அரசியல் செய்கின்றது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை வைத்து பா.ஜ.க அரசியல் செய்யவில்லை. ஆனால் தி.மு.க பல்வேறு அரசியல் செயல்களை செய்கின்றது என்று கூறினார். பல்வேறு மாணவர்களின் கைகளையும் கண்களையும் கட்டி வைத்து தமிழக அரசு போதிய பயிற்சி அவர்களுக்கு கொடுக்காமல் நீட் தேர்வு எழுத வைக்கின்றது என்று அவர் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களின் செயல்கள் மற்றும் அவர்களுடைய பேச்சுக்கள் மாணவர்களை தற்கொலை முயற்சி தூண்டும் விதமாக அவர்கள் பேசுகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வது கோரிக்கையை தமிழக அரசு கண்மூடித்தனமாக வாக்குறுதியை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு தி.மு.க அரசியல் செயல்தான் காரணம் என்றும், அடுத்த யார் தற்கொலை செய்வார்? என்று ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும், கனிமொழியும் வீடு வீடாக சென்று அவர்களுக்கு ஆறுதல் ஆறுதல் கூறுவது போல் விளம்பரம் செய்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு விண்ணப்பித்தவர்கள் 20,000 மாணவர்கள் குறைவு. டெல்லியில் உள்ள மாடலை இங்கு வந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பார்க்கிறது தி.மு.க. ஆனால் டெல்லியை விட கல்வியில் சிறந்தது தமிழகம். எனவே டெல்லி மாடல் இங்கு தேவை இல்லை என்றும் அண்ணாமலை அவர்கள் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News