90 வயது மூதாட்டி பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்றார் !
தமிழகத்தின் மிக மூத்த வயதான மூதாட்டி பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்ற சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இன்று (அக்டோபர் 20) பதவியேற்கும் விழா நடைபெற்று வருகிறது.;
தமிழகத்தின் மிக மூத்த வயதான மூதாட்டி பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்ற சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இன்று (அக்டோபர் 20) பதவியேற்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து 1,568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு முடிந்த பின்னர் மூதாட்டி பேசுகையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்வோம். அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். நான் முதன் முறையாக தேர்தலில் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai