'நெஞ்சுக்கு நீதி'க்கு பேனர் வைத்து பெரம்பலூர் போலீஸ் தேடிக்கொண்ட வழக்கு - இது தேவையா?
தி.மு.க. எம்.எல்.ஏ.வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடித்து வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை தலைமை போலீஸ் கதிரவன் வாழ்த்து பேனர் வைத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்து நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகியுள்ளது. அப்படத்தை பார்ப்பதற்கு அக்கட்சியினருக்கு ரகசிய உத்தரவும் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு படி மேலே சென்ற போலீஸ் கதிரவன் என்பவர் நெஞ்சுக்கு நீதி படம் வெற்றிபெறுவதற்கு வாழ்த்து என்று பேனர் அடித்து வைத்துள்ளார். இந்த பேனர் விவகாரம் போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை கொடுத்தது.
மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்துக்கு எழுந்தது. இதனையடுத்து பேனரை அங்கிருந்து போலீசார் அகற்றினர். இதனிடையே தலைமைக்காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu