"கொரானா வைரஸ் தடுப்பூசிகளை எங்களுக்கு விரைவில் வழங்குங்கள்" - இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்த நேபாளம்!
"கொரானா வைரஸ் தடுப்பூசிகளை எங்களுக்கு விரைவில் வழங்குங்கள்" - இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்த நேபாளம்!
கொரானா வைரஸ்க்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா "குறிப்பிடத்தக்க வெற்றி" பெற்றதை நேபாளம் வெள்ளிக்கிழமை (நேற்று) வாழ்த்தியது.
மேலும் தடுப்பூசிகளை விரைவாக வழங்குமாறு இந்தியாவிற்கு கோரிக்கை அளித்தது. இந்தியா, நேபாளம் இரு நாடுகளுக்கு இடையிலான ஆறாவது கூட்டு ஆணைய சந்திப்பின்போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த பகுதியில் கொரானா வைரஸ் தொற்று நோயை எதிர்ப்பதில் இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த நேபாளம் என்று ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை அந்நாட்டு மருந்து நிர்வாகத்துறை எடுத்தது.
நேபாளத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 816 கோவிட் தொற்றுகளும், 1948 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கோவிஷீல்டு அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. இது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவினால் தயாரிக்கப்படுகிறது.
கோவாக்சின் என்பது ICMR உடன் பாரத் பயோடெக் உருவாக்கிய ஒரு உள்நாட்டு தடுப்பூசி ஆகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸினுக்கு இந்தியா அவசரகால அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
கொரானா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் மனித குலத்திற்கே உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு தெரிவித்திருந்தார்.
இந்திய - நேபாள கூட்டு ஆணையத்தின் கீழ் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் காயாலி ஆகியோர் சந்தித்து வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.