பா.ஜ.க வகுக்கும் தனி வியூகம்: கடந்த தேர்தலில் விட்ட 160 தொகுதிகளுக்கு கொடுக்கும் தனி கவனம்?

பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் கைநழுவிய 160 தொகுதிகளை கையில் எடுத்து கூடுதல் கவனம் செலுத்துகிறது.

Update: 2023-03-14 00:51 GMT

அடுத்த ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு தற்பொழுதில் இருந்தே பா.ஜ.க தீவிரமாக தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மனதில் வைத்தே பல்வேறு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வைத்து அவற்றில் கிடைக்கும் பயன்களை மக்கள் பெற வேண்டும் என்று கூறி வருகிறார். நிறைவடைந்த பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பது, பிரமாண்டமான பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது என்ற பல்வேறு வியூகங்களை பாரதிய ஜனதா செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இருக்கும் தொகுதிகளை தக்க வைப்பதில் எல்லா கட்சிகளும் தீவிர கவனம் செலுத்துகிறது.


ஆனால் பா.ஜ.க கடந்த தேர்தலில் கைநழுவிய 160 தொகுதிகளை கையில் எடுத்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. வருகின்ற தேர்தல் காலங்களில் போது இந்த தொகுதிகளை கைப்பற்ற தேவையான திட்டங்களை அவர்கள் வகுத்து வருகிறார்கள். 80 தொகுதிகளை அமித்ஷா அவர்களும், 80 தொகுதிகளை J. P.நட்டா அவர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து இருக்கிறார்கள். அனைத்து தொகுதிகளிலும் பொறுப்பாளர்களாக தேசிய பொது பொறுப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தொகுதிகளில் அதிகபட்சமாக ஐந்து தொகுதிகள் கொண்ட தொகுப்பாளர்களாக பிரித்து விடப்பட்டு இருக்கிறது.


ஒவ்வொரு தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பிரம்மாண்டமான அணிகள் இணைப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 45 முதல் 55 பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த தற்போது வரை திட்டமிட்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இந்த 160 தொகுதிகளுக்கான பிரச்சாரங்கள் செலவுகள் மற்றும் செலவுகளை விட சற்று கூடுதலாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News