தேவையில்லாமல் வினையை தேடிக்கொண்ட திமுக அரசு...! இனிதான் ஆட்டம் ஆரம்பம்...!

Update: 2023-09-17 14:04 GMT

அமாவசையில் துவங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம்...! தமிழகப் பெண்கள் கடும் அதிர்ச்சி...!

2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் பொழுது திமுக தரப்பில் 505 வாக்குறுதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டது. அதில் முக்கிய வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும் எனவும் அந்தத் தொகை மகளிருக்கு உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை எனவும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல்வருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

அதனை தொடர்ந்து 'நான் கலைஞரின் மகன் சொல்வதைத் தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்' என்று வேறு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், திமுகவும் இந்த வாக்குறுதியை முன்னிறுத்திதேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுகுறித்து எதுவும் பேச்செடுக்காமல் திமுக இருந்து வந்தது, இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியான போது தேர்தல் பிரச்சாரத்தில் எங்கே ஆயிரம் ரூபாய் என மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று உங்களுக்கு அந்த தொகை கொடுக்கப்படும் என திமுக தரப்பில் அப்போது அறிவிக்கப்பட்டது.

ஆனால் திமுக தேர்தல் சமயத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் என வாக்குறுதியை கொடுத்தது ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதுவே பெண்கள் மத்தியில் ஒரு ஏமாற்றமாக அமைந்தது தற்பொழுது இன்று இந்த திட்டத்தை முதலில் ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார். துவங்கி வைத்தது மட்டுமல்லாமல் நான் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றி விட்டேன் என்று வேறு மக்கள் மத்தியில் பேசி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த தொகை கிடைக்காத பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக எங்களை விட பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இந்த தொகையை வாங்குகிறார்கள் ஆனால் நாங்கள் வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்து பிழைத்து வருகிறோம் எங்களுக்கு இந்த தொகை கிடைக்கவில்லை என்பது போன்ற பல பெண்கள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள்.


தற்பொழுது இந்த தொகை குறிப்பிட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அந்த பெண்கள் பட்டியல் இன்னும் வெளிவரவில்லை ஆனால் விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்பாக திமுக வாக்குறுதியில் கூறிவிட்டதே நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என நம்பி விண்ணப்பித்த பலருக்கு இந்த தொகை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தமிழகத்தில் பெரும் அளவில் உள்ள பெண்கள் திமுக அரசு மீது மீது அதிருப்தியில் இருந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக அரசு இதற்கு பதில் கூற வேண்டும் எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Similar News