மணல் விவகாரத்தில் குதித்த அமலாக்கத்துறை...! ஆட்சியே கவிழப்போகும் அபாயம்...! பரபர தகவல்கள்..!
மணல் மாஃபியா ரெய்டால் ஆட்சியே கவிழப்போகிறது என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது...!
தமிழகத்தில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சில இடங்களில் 36 மணி நேரம் மணல் மாஃபியா சார்ந்த நபர்கள் மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை கடுமையான சோதனையில் ஈடுபட்டது. பல இடங்களில் அமராக்கத் துறை நாள் கணக்கில் குறி வைத்து இந்த சோதனையில் இறங்கியதாகவும் தினமும் அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் இந்த மாஃபியா செயல்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தமிழகத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், திருவையாறு, கொள்ளிடம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்றாலும், இந்தப் பகுதிகளில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மணல் கொள்ளையில் தனிநபர்கள் ஈடுபட்டது அமலாக்கத்துறை சோதனையின்போது வெளிப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. முதல்நாள் காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீண்டது. தினமும் காலை 11 மணிக்குள் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இந்த மணல் குவாரியில் பணம் வசூல் ஆகியது தெரியவந்திருக்கின்றது.
குவாரியில் உள்ள ஒரு கண்டெய்னர் அறையில் பணம் எண்ணுவதற்காக 28 இயந்திரம் உள்ளே வைக்கப்பட்டுள்ளது எனவும் சோதனையில் தெரியவந்தது. அரசு நிர்ணயித்த மூன்று யூனிட்டிற்கு 624 ரூபாய் மணல் விலையாம். யாருக்கும் நேரடியாக குவாரியில் மணல் கொடுக்கப்படுவதில்லை. ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இங்கே அமலாக்கத்துறை சோதனையில் டோக்கன் கொடுப்பதற்கு ஒரு ஏஜென்ட்டும், அவருக்கும் ஒரு கமிஷன் என்ற தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.