ஜாமீனை கண்ணுல காட்டுங்கப்பா...! புழல் சிறையில் கேட்கும் 'கரூர் தல' புலம்பல் சத்தம்...!
ஜாமீனை கண்ணுல காட்டுங்கப்பா...! புழலில் துடிக்கும் கரூரின் பெரிய தல...!
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அவரை விசாரணையில் எடுத்து கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை செந்தில் பாலாஜி வழக்கில் தாக்கல் செய்துள்ளது, செந்தில் பாலாஜி பணபரிமாற்ற விவகாரம், பண மோசடி செய்தது வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி ஏமாற்றியது உள்ளிட்ட பல விவரங்களை அவரது வங்கி கணக்கு, அவரது குடும்பத்தாரின் வங்கி கணக்கு என ஒட்டுமொத்தமாக அத்தனையையும் துருவி எடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் குற்றப்பத்திரிகை ஆவணங்களாக சேர்த்துள்ளது. மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பியும் இன்னமும் அமலாக்கத்துறை வசம் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அடுத்த முறை காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொலி வாயிலாக அவர் ஆஜரானால் போதும் என்றும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி கடந்த முறை ஜாமீன் கேட்கும்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி முன்பு கடந்த 15 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை எப்படியாவது ஜாமினில் எடுத்து விட வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு முயற்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து மிகப்பெரிய லாயரான கபில் சிபில் வேறு செந்தில் பாலாஜிக்காக வந்து ஆஜராகி இருந்தார், அவர் ஆஜராகியும் செந்தில் பாலாஜி வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் கடந்த வாரத்தில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்றைய செந்தில்பாலாஜி வழக்கில் ஜாமீன் மீது தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.