வெளியானது அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய தகவல்! ஒற்றை வரியில் அண்ணாமலை பதில்!
இதுவரை விமர்சனமாக அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பெற்றது என்று கூறி வந்த அதிமுக தரப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக அதிமுக - பாஜக கூட்டணி நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்திருந்தார்.
இறுதியாக இந்த கூட்டத்தின் முடிவில் இன்று முதல் அதிமுக - பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதை அடுத்து அரசியல் களம் பரபரப்பானது, இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடை பயணத்தை கோவையில் நடத்தி வருகிறார்.
அந்த நடை பயணத்தின் பொழுது அதிமுக - பாஜக கூட்டணியின் முடிவு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு ஒற்றை வரியில் பதிலளிக்க வேண்டும் என்றால் தேசிய தலைமை தான் இதற்கான முடிவை தெரிவிப்பார்கள். அதாவது பாஜக ஒரு தேசிய கட்சி மற்றும் தேசிய தலைவர்களை உள்ளடக்கியது எனவே இந்த தகவல் தற்போது அவர்களின் கவனத்திற்கு சென்றிருக்கும் ஆதலால் இது பற்றி அவர்களே தெரிவிப்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.
Source - Asianet news