மொத்தமும் போகப்போகுது..! மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் கடுப்படித்த பின்னணி..!
கூட்டத்தில் மிரட்டிய முதல்வர் ஸ்டாலின்...! தோல்வி பயத்தின் வெளிப்பாடா?
இன்னும் ஐந்து மாத காலத்தில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதற்கான அரசியல் கள வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை அதுவும் கடந்த ஒரு வார காலமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததிலிருந்து அரசியல் வேலைகள் படு வேகமாக நடைபெற துவங்கிவிட்டன, ஆளும் திமுக தரப்பிலிருந்து I.N.D.I கூட்டணி கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது மேலும் வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து என்ன செய்ய வேண்டும் என கூறுவது போன்ற வேலைகளை துவங்கிவிட்டது.
குறிப்பாக நேற்று கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினருக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவரும் அதனை சரிபார்க்கும் பணிகளை உடனே துவங்க வேண்டும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.
மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் திமுக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது..
” விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாக காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.