நீ செய்த வினையெல்லாம்...! வீல் சேரில் செந்தில்பாலாஜி வர காரணம்.. கசிந்த பகீர் தகவல்கள்...

Update: 2023-10-10 17:15 GMT

பரிதாபமாக சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட கரூர் அமைச்சர்...! அதுதான் காரணம் என பரவும் தகவல்...!

திமுகவின் முக்கிய அமைச்சராக வலம் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமலாக்க துறையால் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு பின்னர் அந்த ரெய்டில் முடிவில் கைது செய்யப்பட்டார். வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி கைது செய்ததற்கு பிறகு அவரது மீது 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பணத்தை வாங்கி ஏமாற்றியது, அரசு வேலையை விலை வைத்து விற்றது மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, இந்த வழக்கை சட்டரீதியாக தள்ளி வைத்து போன்ற பல புகார்கள் அந்த குற்ற பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்து.

இது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜி இந்த வழக்கிலிருந்து எப்பொழுது விடுதலை ஆவார் எப்பொழுது ஜாமீன் கிடைக்கும் என தெரியாது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன .ஒரு ஜாமீன் கூட எடுக்க முடியாத அளவிற்கு செந்தில் பாலாஜி இந்த வழக்கில் சிக்கி உள்ளார் எனவும் அவர் விரைந்து வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யும் போது ஏற்பட்ட நெஞ்சு வலியின் காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து செந்தில் பாலாஜி சிறைவாசத்தால் மேலும் உடல் ரீதியில் பலவீனமடைந்துவிட்டார் எனவும் தகவல்கள் கசிந்த நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

காலில் மரத்துப்போதல் என்ற உணர்வு காரணமாக நிற்க கூட முடியாத நிலையில் வீல்சேரில் வைத்து அழைத்து வரப்பட்ட வரும்பொழுது சுற்றிலும் கேமராக்கள் அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தன, அப்பொழுது முகத்தை தெரியாதபடி மாஸ்க் வைத்து மறைத்துக் கொண்டு தலையை குனிந்தபடியே சென்றார், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிக அளவில் வைரல் ஆகிறது.

இது குறித்து பல இணையதள பதிவுகளும், அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளது அதாவது போக்குவரத்து துறையில் அமைச்சராக இருக்கும் பொழுது வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி எத்தனை பேர் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பார்கள், அதில் எத்தனை குடும்பம் நடுத்தெருவிற்கு வந்திருக்கும்? எவ்வளவு பேர் தனது மனைவி, தாயின் நகையை அடகு வைத்து வைத்து தங்களால் முடிந்ததை புரட்டிக் கொண்டு வந்து வேலைக்காக கொடுத்திருப்பார்கள்! எத்தனை குடும்பங்கள் இதனால் நடுத்தெருவிற்கு வந்திருக்கும்? எத்தனை பேர் தங்களிடம் இருந்த ஒரே சொத்து, தங்களிடம் இருந்த வாழ்நாள் சேமிப்பு, தங்கள் வாழ்ந்த வீடு, இருக்கக்கூடிய வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து இந்த வேலைக்காக முயற்சி செய்திருப்பார்கள்? ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கு ஒருவர் விண்ணப்பிக்கிறார் என்றால் அவர் என்ன மெத்த படித்தவராகவும், பணக்காரராகவும் இருப்பார்? ஏதோ முடியாதவர் தானே இந்த போன்று வேலைக்கு வருவார். அவரிடம் இப்படி பணத்தை வாங்கிய ஏமாற்றியதன் காரணம் தான் இப்படி செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டது எனவும் விமர்சனங்கள் சமூக வலைத்தளம் முழுவதும் எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்து விட்டு மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லலாம் என கூறியதன் காரணமாக தற்பொழுது மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் இன்று வீல்சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது எனும் விமர்சங்கள் இணையத்தில் அதிகமாக தென்படுகிறது...

Similar News