ரெண்டே முக்கால் கோடிக்கு வாட்ச் மட்டும்...! செந்தில்பாலாஜி எல்லாம் ஜுஜுபி...! வசமா சிக்கிய ஜெகத்ரட்சகன்...
ஏழாவது நாளாக எக்ஸ்ட்ரா அதிகாரிகளை போட்டு ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை...! ஆயிரக்கணக்கில் அரசு பணம் வரி ஏய்ப்பு...!
திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகன் ரெய்டு தான் தற்பொழுது தமிழக அரசியலை புரட்டிப் போட்டு வருகிறது, கடந்த வாரங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டுகள் எல்லாம் சாதாரணம். இந்த ரெய்டு தான் பெரிய ரெய்டு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு துவங்கிய ரெய்டு வெறும் செய்தியாக தான் வெளியானது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல ரெய்டில் பிடிக்கப்படும் தொகை மற்றும் கைப்பற்றப்படும் நகைகள், சிக்கிய ஆவணங்கள், கண்டுபிடிக்கப்படும் வரி ஏய்ப்புகள் என ஒவ்வொரு தகவலும் நாளுக்கு நாளும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.
இதற்க்கு மத்திய அமைச்சராக இருந்த இந்த எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் என பல தொழில்கள் அடங்கும்.
ஆனால் ஏற்கனவே பலமுறை ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டாலும் இந்த முறை நடத்தப்பட்ட ரெய்டு தான் மிகப்பெரியது என்கிறார்கள். ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை அடுத்து வருமான வரித்துறை இந்த ரெய்டில் இறங்கிய உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜெகத்ரட்சகன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புள்ளி என இந்த ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது ஜெகத்ரட்சகன் வரியை ஏமாற்றியதற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை பெட்டி, பெட்டியாக தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.