ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே? என்னால முடியலடா சாமி என சரணடைந்த சின்னவர்!

Update: 2023-10-26 03:23 GMT

நீட் விவகாரத்தில் வசமாக சிக்கிய திமுக...! வேறு வழி இல்லாமல் சின்னவர் செய்த காரியம்..!

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை அண்மையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னதாக நீட் ஒழிப்பு என்பது எப்படி என எங்களுக்கு தெரியும், எப்படி ஒழிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூறுகிறோம் அது ரகசியம் என தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தில் பேசியதுபோல் ஆட்சிக்கு வந்தபின் நீட் தேர்வில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக.

இது குறித்து எதிர்க்கட்சிகள், மக்கள் கேள்வி எழுப்பும்போது ஆளுநரிடம் தீர்மானம் நிலுவையில் இருக்கிறது எனக் கூறி அரசியல் செய்து வருகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்தது. மேலும் நீட் ரத்து விவகாரத்தில் விமர்சனத்தை தவிர்ப்பதற்காக கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் உதயநிதி.

அந்த நீட் ரத்து போராட்டத்தில் நீட் ரத்து ரகசியம் என்பது சட்டப்படி போராடுவதுதான், நாங்கள் அதற்கான முயற்சிகளை செய்து கொண்டே இருப்போம் என கூறியது பெருமளவில் மாணவர்களை ஈர்க்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகத்தான் தேர்தல் வரும் நிலையில் நீட் ரத்து என சொன்னீர்களே என்ன ஆயிற்று என கண்டிப்பாக கேள்விகள் எழும்பும் என்பதற்காக தற்பொழுது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை ஆரம்பிக்க போவதாகவோ அறிவித்து கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர் திமுகவினர்.

இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் வந்துள்ளன, ஆட்சிக்கு வந்து ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவேன் என வாய் வீரம் காட்டிய இன்றைய முதலமைச்சரும், அவருடைய வாரிசும் விரைவில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது என அறிந்து மீண்டும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என அதிமுக தரப்பிலும், 'ஏன் நீட்டுக்கு எதிராக அம்பது லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார் உதயநிதி? இந்த 50 லட்சம் கையெழுத்தை வாங்குவதற்கு திமுக எதற்கு? இதை அவர்களே போட்டு விடுவார்கள், துப்பில்லை என்றால் திமுக வீட்டுக்கு போய் விடலாம்' என கடுமையாக பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இப்படி நீட் விவகாரத்தால் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் இனி கையெழுத்து மட்டும் வேலைக்காகாது என பிற கட்சிகளையும் நீட் விவகாரத்தில் இணைக்க வேண்டும் என கூறி உதயநிதி அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தேசிய உதயநிதி ஸ்டாலின், 'பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக நீட் தேர்வை உள்ளே நுழைத்தது, தற்போது நீட் தேர்வு எதிர்ப்பு எங்களுடன் துணை நில்லுங்கள்! நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கு வழங்கி விடுகிறோம் நீட் தேர்வை அரசியல் ஆக்க வேண்டாம். மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து நடத்துவோம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு விடுகிறேன், இது என்னுடைய தனிப்பட்ட நலனுக்கானது அல்ல மக்களுக்கானது, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதன் ஒட்டுமொத்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என அதிமுகவிடம் சரணடையும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் அண்ணாமலையின் அதிரடி அரசியல், மறுபக்கம் மக்களின் கேள்வி என மொத்தமும் சேர்த்து தற்பொழுது நீட் விவகாரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதி மண்டையை பிடித்துக் கொள்கிறார் என உதயநிதி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News