டி.ஆர்.பாலு ஆளுநர் மாளிகையை விமர்சித்த பின் நடந்த பயங்கரம்! என்ன நடக்கிறது தமிழகத்தில்?

Update: 2023-10-27 03:12 GMT

டி ஆர் பாலு ஆளுநர் மாளிகையை தாக்கி அறிக்கை விட்ட அடுத்த நாளே தாக்குதல்! என்ன நடக்கிறது தமிழகத்தில்?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்தான் தற்பொழுது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீசி உள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முடிந்த கருக்கா வினோதத்தை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுக்கும்பொழுது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தப்பித்து விட்டனர் என கூறியுள்ளது. அது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் இணை ஆணையர் கருத்து தெரிவிக்கும் போது 'ஆளுநர் மாளிகையில் எதுவும் சேதம் ஏற்படவில்லை, இந்த குண்டு சாலையில் தான் விழுந்தது' என கூறினார்.

ஆனால் இது குறித்து ஆளுநர் மாளிகையே போலீசருக்கு அனுப்பி உள்ள புகாரில் ஏற்கனவே 'தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சிக்கு சென்ற ஆளுநருக்கு இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, தற்பொழுது இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் நடந்துள்ளது. இது தமிழ்நாட்டில் புதிதல்ல, ஏற்கனவே ஆளுநர் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளது! இதற்கு நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என புகார் பறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு வகையான சர்ச்சையான கருத்துக்கள் உலவும் நிலையில் டி.ஆர்.பாலு ஆளுநர் விவகாரத்தில் பேசிய கடுமையாக பேசிய அடுத்த சில தினங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

'ஆளுநர் மாளிகையே அடக்கிட்டு வாயை' என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டு அடுத்த சில தினங்களில் ஆளுநர் மாளிகை மீது இந்த தாக்குதல் நடப்பது குறித்து சந்தேகம் எழுந்த விமர்சனங்கள் பரவிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன இது குறித்து வினோத் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்ததில் இவர் தேனாம்பேட்டை எம்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் கொண்டு வீசியவரும் இவர்தான்,

அண்மையில் தான் இவர் வெளியே வந்துள்ளார் வெளியே வந்தவுடன் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரியவந்துள்ளது, ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தியுள்ள வினோத் என்பவர் ஏற்கனவே குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கும் நிலையில் அவருடைய நடவடிக்கையை கண்காணிக்கும் பொறுப்பும் அரசுக்கு உண்டு, திமுக அரசு இதனை கண்காணிக்க தவறிவிட்டது! அதன் காரணமாகத்தான் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

'ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை' என டி.ஆர்.பாலு பேசிய நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்கின்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது இது கடும் கண்டனத்துக்குரியது' என அறிக்கை கொடுத்துள்ளார்.

ஏற்கனவே டி.ஆர்.பாலு பேசியதும், திமுக மீது விமர்சனங்கள் எழுந்ததும், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்ததும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ் இந்த அறிக்கை வேறு பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News