'கபாலீஸ்வரர் நிலத்துல கையை வச்சு பாருங்க...' - களத்தில் இறங்கிய அண்ணாமலை, கப்சுப் சேகர்பாபு!

Update: 2023-10-27 03:13 GMT

வசமாக சிக்கிய அறநிலையத்துறை...! இறுதி எச்சரிக்கை கொடுத்த அண்ணாமலை...!

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கும், தமிழக பாஜக விற்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் அடிக்கடி ஏற்படும்.

குறிப்பாக அறநிலையத்துறை இந்து சமய கோவில்களை பாதுகாப்பது முறையாக இல்லை, கணக்கு வழக்குகள் சரியாக இல்லை, கோவில்கள் பணத்தில் அதிகாரிகள் தின்று கொழிக்கிறார்கள், பட்டர் முறுக்கு, இனோவா கார் என அதிகாரிகள் சுகபோகமாக வாழ்கின்றனர்' எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டது பாஜக.

ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை என ஒன்று இல்லாமலே செய்து விடுவோம், அந்த அளவிற்கு அறநிலையத்துறை கோவில்களின் சொத்தை சாப்பிடுகிறது என்றெல்லாம் கூறி பாஜகவினர் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது மட்டுமல்லாமல் அறநிலையத்துறை முறையாக கணக்கு வழக்குகளை பராமரிக்கவில்லை, கோவில்கள் சொத்துக்கு கணக்கு வழக்கு என்ன இருக்கிறது என்று அறநிலைத்துறைக்கு தெரியவில்லை எனக் கூறியது வேறு சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுரிடம் கருத்துக்கள் கேட்ட பொழுது 'அண்ணாமலை அவர்கள் விளம்பரத்திற்காக இதனை பேசுகிறார், அறநிலையத்துறையை எப்பொழுதும் போல் சிறப்பாக செயல்படுகிறது, திமுக ஆட்சியில் நாங்கள் 2000 கோவிலுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்! இதெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லையா? என்பது போல் பதிலை கூறினார்.

இந்த நிலையில் மயிலாப்பூர் கோவில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, மயிலாப்பூர் கோவில் இடத்தில் கலாச்சார மையம் கட்டப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதும், ஒப்பந்தம் கோரி இருப்பதாகவும் அறநிலைத்துறை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் எடுத்துள்ளார், இந்த விவகாரத்தை வைத்து எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிடும் பொழுது 'சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து சென்னையில் கலாச்சார மையம் கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஈடுபடப் போவதாக ஒப்பந்தம் கோரியிருக்கிறது.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பது, கோவில் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்வது, கோவில் பணத்தில் வாகனங்கள் வாங்குவது, கோவிலுக்கு தானமாக வந்த கால்நடைகளை திமுகவினருக்கு கொடுப்பது என தொடர்ந்து கோவில் சொத்துக்கள் கையாடல் செய்வதில் திமுக குறியாக இருக்கிறது. கோவில் நிதியை கோவில் தொடர்பான பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும் என சட்டமே இருக்கையில் கோவில் நிதியையும் கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து கலாச்சாரம் மையம் அமைக்கும் உரிமை திமுகவிற்கு யார் தந்தது?

கோவிலுக்கான மூலதன நிதியை எதற்கும் அவர்கள் எடுக்கக்கூடாது, அர்ச்சகர் பணியாளர் பயிற்சி பக்தர்களுக்கான அடிப்படை வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கு மட்டுமே மூலதன நிதி போக மீதமுள்ள வருமானத்தை பயன்படுத்த வேண்டும்.

அதுபோக மீதி இருக்கும் உபரி நிதியைத்தான் வேதம, ஆகம பாடசாலைகள் ஆதரவற்றோர் இல்லம் இந்து சமய மேம்பாட்டு பள்ளி, கல்லூரிகள் அமைத்தல்! நலிந்த கோவில்கள் புரணமைப்பு, மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவுகள் 36 மற்றும் 66 தெளிவாக கூறுகின்றன.

உபரி நிதியை வணிகப் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடம் கட்ட பயன்படுத்தக் கூடாது, என்பது தெளிவாக இருக்கையில் சட்டத்தை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மயிலாப்பூர் கோவில் கபாலீஸ்வரர் நிதியை எடுத்து கோவில் நிலத்தில் கலாச்சாரம் மையம் அமைக்கும் முறைகேட்டை திமுக அரசு தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு பாஜக சார்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என இந்த உண்டியல் திருட்டு திமுக அரசை எச்சரிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

இந்த விவகாரம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, இதற்கு இன்னமும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரப்பிலிருந்து பதில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News