தொடரும் ஆவின் நிறுவனத்தின் முறைகேடுகள்.. உண்மையை புட்டு புட்டு வைத்த அண்ணாமலை..
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு துறைகளிலும் முறைகேடுகள் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. குறிப்பாக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து பால் வளத் துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடம் இன்றி பல்வேறு முறைகேடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் பொழுது, "அளவுக்கு அதிகமான முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் காரணமாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
இவருக்கு அவரே பரவா இல்லை என்ற அளவிற்கு தற்போது பால்வளத் துறையில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக மலைவிழுங்கி என்ற பெயரெடுத்து இருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் பால்வளத் துறையில் இருக்கும் வளத்தை மட்டும் தான் பார்க்கிறார். பாலையும், துறையையும் ஒட்டுமொத்தமாக கைவிட்டு விட்டார். பால் கொள்முதல் விலகி உயர்த்தாமல் உற்பத்தியாளர்களை தனியார் பக்கம் திருப்பி விட்டு பிற மாநிலங்களில் இருந்து பால் பவுடர்களை அதிக விலைக்கு வாங்க செய்தார்.
இதனால் மக்கள் ஆவின் நிறுவனத்தின் பாலை வாங்குவதை குறைத்து விட்டார்கள். இதன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு பெரும்பளவு இழப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தை பெருமளவில் நம்பாமல் தனியார் நிறுவனத்தில் பால் பாக்கெட் கடை அதிகமாக வாங்கி உபயோகிக்கிறார்கள். குறிப்பாக தனியார் நிறுவனத்திற்கு கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார். இதனால் ஆவின் நிறுவனம் முற்றிலும் முடங்கிப் போய்விட்டிருக்கிறது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter Source