கோடிக்கணக்கில் பரிவர்த்தனைகள்! பல நூறு கோடி சொத்துக்கள் வந்தது எப்படி? எ.வ வேலுவை இரண்டாவது நாளாக உலுக்கும் அதிகாரிகள்!

Update: 2023-11-04 07:04 GMT

திமுக அமைச்சர் எ.வ.வேலுவை உலுக்கும் ரெய்டு! இரண்டாவது நாளாக சல்லடை போடும் அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனையை துவங்கியுள்ளனர், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் என முக்கியமான இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருகிறது. கரூரில் முன்னாள் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட மூன்று இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசிக்கு முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவரது பைனான்ஸ் நிதி நிறுவனம் மற்றும் கேவிபி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு என கரூர் மாநகரில் மூன்று இடங்களில் நேற்று அதிகாலை 6:00 மணியிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்றது

இதே போல் கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சக்திவேல் என்பவரது வீட்டில் நேற்று தொடங்கிய சோதனை மாலை 6 மணி அளவில் முடிந்தது. கரூரில் மூன்று இடங்களில் தொடர்ந்து இரண்டவது நாளாக சோதனையின் வாயிலாக, அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் எனவும், அதன் அடிப்படையில் தொடர் சோதனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 40 இடங்கள் என ஆரம்பித்த ரைடு தற்பொழுது கிடைக்கும் ஆவணங்களை வைத்து எண்ணிக்கை அதிகமாக 80 இடங்கள் வரை சென்றுள்ளது. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது, ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் அமைச்சர் எ.வ.வேலு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல்களை கடந்த சில மாத காலமாக களத்தில் அலசி ஆராய்ந்து திரட்டி அதன் அடிப்படையில் சோதனைகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த சோதனை பட்டியலில் திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் வேலு நகரில் சுமார் 200 ஏக்கரில் உள்ள அருணை கல்வி நிறுவனம் வளாகம், அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பார்மசி கல்லூரி, செவிலியர் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள், சர்வதேச நட்சத்திர விடுதிக்கு இணையான பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை மற்றும் எ.வ.வேலுவின் வீடும் இந்த வளாகத்தில் உள்ளது.

திருவண்ணாமலையின் பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை கிரானைட் குவாரி பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் அவருக்கு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை சுமார் ஆறு மணியளவில் அமைச்சர் எ.வ.வேலு நடைப்பயிற்சியில் நடைபெற்று ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது 25 கார்கள், வேன்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் 75க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் அவரது கல்வி நிறுவன வளாகத்தில் நுழைந்துள்ளதாகவும் பின்னர் தனித்தனியாக பிரிந்து அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி என பல்வேறு இடங்களில் இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்புகள், டிஜிட்டல் ஆவணங்கள், பென்டிரைவுகள், லேப்டாப்புகள் போன்ற முக்கியமானவற்றை கையில் எடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றன. ஏற்கனவே திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு நடத்திய பொழுது ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது போல் இங்கும் அது போல் பலநூறு கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News